Sunday, February 1, 2009

நன்றி சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்

என் இனிய தமிழா!
தமிழ் தாய் ஈன்றெடுத்த முத்து குமரா!
தமிழர்களின் நண்பா- உன் தியாகத்திற்கு
இந்த பாமரன் எழுதும் வெண்பா.

தமிழ் ஈழம் வரும் வரை அல்ல
தமிழ் இனம் வாழும் வரை
நீ வாழ்ந்துக்கொண்டிருப்பாய்
கல்லறையில் அல்ல, எங்கள் கருவறையில்.

எங்கடா போனாய்? - நாம்
தமிழ் ஈழத்தை காணும் முன்பு
நீ முத்து பயலாடா
புதைந்து கிடந்தாலும் புதையலாகவே இருக்கிறாய்!!







Friday, January 9, 2009

தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த உர
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

Thursday, January 8, 2009

கண்ணீர் பொங்கும் விடுதலைப் பொங்கல்!

கண்களில் கண்ணீர் கசிந்து பொங்க,
கோபத்தில் தீயாய் விளாசிப் பொங்க,
பொங்கிய நினைவுகள் மனதிற் பொங்க,
பொங்கலென்ன பொங்கல்? தமிழருக்குப் பொங்கல்?
பொங்குக! பொங்குக! புயலாகப் பொங்குக!

சங்கமமைத்துத் தமிழ் வளர்த்ததெங்களினம்
கறையான் புற்றெடுக்க பாம்பதுபோல், சிங்களவன்
எங்கள் மண்ணினை ஆர்ப்பரித்து நிற்கையிலே
பொங்கலென்ன பொங்கல்? எங்களுக்குப் பொங்கல்?

மூன்று சகாப்தத்தின் முன் பொங்கியது போலவே,
பொங்கிக் கதிரவனுக்குக் காணிக்கை தர ஆவல்,
அப்படியொரு சந்தர்ப்பம் மீண்டும் வரும்வரை
பொங்கலென்ன பொங்கல்? தமிழருக்குப் பொங்கல்?

இயற்கையாய் மாறிடும் காலத்தை ஏற்கலாம்
செயற்கையாய் மாற்றினால் யாரதை ஏற்கலாம்?
பயமூட்டித் தமிழரை அடக்கமுயல் பாவியர்
பழிஏற்று அவர்காலைத் தமிழீழம் நக்குமா?

பொங்குக! பொங்குக! புயலாகப் பொங்குக!
எங்கணும் மங்களம் சுதந்திரம் என்குக!
எங்களின் தேசமெம் கரம் சேர்ந்து மகிழவே
பொங்குக! பொங்குக! தைப்பொங்கல் பொங்குக!

மக்களின் ஆட்சி என்பதன் அர்த்தம் எதுவென உணர்த்திடல் வேண்டும்
மக்களின் உண்மைச் சுதந்திரம் மீண்டும் தமிழ்மண் மலர்ந்திட வேண்டும் திக்கெல்லாம் நிறை தமிழினம் கூடி அதைக்கொண் டாடிட வேண்டும் அக்கதை தமிழரின் சரித்திர நூலில் தங்கத்தில் பதித்திட வேண்டும்!

பொங்கிக் கொண்டிருப்பது விடுதலைப் பொங்கல்
பொங்கப் போவது சுதந்திரப் பொங்கல்!!
தொடங்கும் ஆனந்த கண்ணீர் பொங்கல்!!!

Friday, January 2, 2009

புத்தம் தவறிய இலங்கை பௌத்தர்கள்

பௌத்த மதம் தேசிய மதமாக பின்பற்றுகிற நாடுகளில் ஒன்றுதான் இலங்கை. இந்நாட்டில் பௌத்தம் பரவியதற்கு காரணமாய் இருந்தவர் அசோக மன்னர் இவருடைய ஆட்சிக்காலம் கிமு 273 முதல் கிமு 232 வரை ஆகும். கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார்.புத்த மதத்தை ஆசியாவெங்கும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார்.
இப்படி போரை வெறுத்து புத்தம் ஏற்றுக்கொண்ட அசோகரின் முயற்சி இப்படி வீணாய் போனதே. மற்றவர்கள் படும் துன்பத்தை, இன்னலை காண முடியாமல் துறவறம் பூண்ட புத்தரை பின்பற்றும் இந்த சிங்களர்களுக்கு கொலைவெரிதனமான எண்ணம். தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவம். இதையெல்லாம் தட்டி கேட்க்காமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் புத்த பிட்சுக்கள் என்பதுதான் வேதனை.
புத்தர்க்கு கூட தமிழரை பிடிக்காதா என்ன?