கண்களில் கண்ணீர் கசிந்து பொங்க,
கோபத்தில் தீயாய் விளாசிப் பொங்க,
பொங்கிய நினைவுகள் மனதிற் பொங்க,
பொங்கலென்ன பொங்கல்? தமிழருக்குப் பொங்கல்?
பொங்குக! பொங்குக! புயலாகப் பொங்குக!
சங்கமமைத்துத் தமிழ் வளர்த்ததெங்களினம்
கறையான் புற்றெடுக்க பாம்பதுபோல், சிங்களவன்
எங்கள் மண்ணினை ஆர்ப்பரித்து நிற்கையிலே
பொங்கலென்ன பொங்கல்? எங்களுக்குப் பொங்கல்?
மூன்று சகாப்தத்தின் முன் பொங்கியது போலவே,
பொங்கிக் கதிரவனுக்குக் காணிக்கை தர ஆவல்,
அப்படியொரு சந்தர்ப்பம் மீண்டும் வரும்வரை
பொங்கலென்ன பொங்கல்? தமிழருக்குப் பொங்கல்?
இயற்கையாய் மாறிடும் காலத்தை ஏற்கலாம்
செயற்கையாய் மாற்றினால் யாரதை ஏற்கலாம்?
பயமூட்டித் தமிழரை அடக்கமுயல் பாவியர்
பழிஏற்று அவர்காலைத் தமிழீழம் நக்குமா?
பொங்குக! பொங்குக! புயலாகப் பொங்குக!
எங்கணும் மங்களம் சுதந்திரம் என்குக!
எங்களின் தேசமெம் கரம் சேர்ந்து மகிழவே
பொங்குக! பொங்குக! தைப்பொங்கல் பொங்குக!
மக்களின் ஆட்சி என்பதன் அர்த்தம் எதுவென உணர்த்திடல் வேண்டும்
மக்களின் உண்மைச் சுதந்திரம் மீண்டும் தமிழ்மண் மலர்ந்திட வேண்டும் திக்கெல்லாம் நிறை தமிழினம் கூடி அதைக்கொண் டாடிட வேண்டும் அக்கதை தமிழரின் சரித்திர நூலில் தங்கத்தில் பதித்திட வேண்டும்!
பொங்கிக் கொண்டிருப்பது விடுதலைப் பொங்கல்
பொங்கப் போவது சுதந்திரப் பொங்கல்!!
தொடங்கும் ஆனந்த கண்ணீர் பொங்கல்!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment