Showing posts with label பாமரன். Show all posts
Showing posts with label பாமரன். Show all posts

Sunday, February 1, 2009

நன்றி சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்

என் இனிய தமிழா!
தமிழ் தாய் ஈன்றெடுத்த முத்து குமரா!
தமிழர்களின் நண்பா- உன் தியாகத்திற்கு
இந்த பாமரன் எழுதும் வெண்பா.

தமிழ் ஈழம் வரும் வரை அல்ல
தமிழ் இனம் வாழும் வரை
நீ வாழ்ந்துக்கொண்டிருப்பாய்
கல்லறையில் அல்ல, எங்கள் கருவறையில்.

எங்கடா போனாய்? - நாம்
தமிழ் ஈழத்தை காணும் முன்பு
நீ முத்து பயலாடா
புதைந்து கிடந்தாலும் புதையலாகவே இருக்கிறாய்!!







Thursday, January 8, 2009

கண்ணீர் பொங்கும் விடுதலைப் பொங்கல்!

கண்களில் கண்ணீர் கசிந்து பொங்க,
கோபத்தில் தீயாய் விளாசிப் பொங்க,
பொங்கிய நினைவுகள் மனதிற் பொங்க,
பொங்கலென்ன பொங்கல்? தமிழருக்குப் பொங்கல்?
பொங்குக! பொங்குக! புயலாகப் பொங்குக!

சங்கமமைத்துத் தமிழ் வளர்த்ததெங்களினம்
கறையான் புற்றெடுக்க பாம்பதுபோல், சிங்களவன்
எங்கள் மண்ணினை ஆர்ப்பரித்து நிற்கையிலே
பொங்கலென்ன பொங்கல்? எங்களுக்குப் பொங்கல்?

மூன்று சகாப்தத்தின் முன் பொங்கியது போலவே,
பொங்கிக் கதிரவனுக்குக் காணிக்கை தர ஆவல்,
அப்படியொரு சந்தர்ப்பம் மீண்டும் வரும்வரை
பொங்கலென்ன பொங்கல்? தமிழருக்குப் பொங்கல்?

இயற்கையாய் மாறிடும் காலத்தை ஏற்கலாம்
செயற்கையாய் மாற்றினால் யாரதை ஏற்கலாம்?
பயமூட்டித் தமிழரை அடக்கமுயல் பாவியர்
பழிஏற்று அவர்காலைத் தமிழீழம் நக்குமா?

பொங்குக! பொங்குக! புயலாகப் பொங்குக!
எங்கணும் மங்களம் சுதந்திரம் என்குக!
எங்களின் தேசமெம் கரம் சேர்ந்து மகிழவே
பொங்குக! பொங்குக! தைப்பொங்கல் பொங்குக!

மக்களின் ஆட்சி என்பதன் அர்த்தம் எதுவென உணர்த்திடல் வேண்டும்
மக்களின் உண்மைச் சுதந்திரம் மீண்டும் தமிழ்மண் மலர்ந்திட வேண்டும் திக்கெல்லாம் நிறை தமிழினம் கூடி அதைக்கொண் டாடிட வேண்டும் அக்கதை தமிழரின் சரித்திர நூலில் தங்கத்தில் பதித்திட வேண்டும்!

பொங்கிக் கொண்டிருப்பது விடுதலைப் பொங்கல்
பொங்கப் போவது சுதந்திரப் பொங்கல்!!
தொடங்கும் ஆனந்த கண்ணீர் பொங்கல்!!!

Wednesday, November 5, 2008

மனிதநேயம் கொண்ட கமல்

நவ. 7 கமலின் பிறந்தநாள். கமல் ரசிகர்களுக்கு இந்நாள் திருவிழா. இந்த முறை சின்ன மாற்றம். ஈழத்தமிழரின் நலனுக்காக கொடைகொடுத்த வள்ளல்களின் மத்தியில் தனித்து நிற்பவர் நம் உள்ளங்களின்(உலக) நாயகன் பதமஸ்ரீ கமலஹாசன், ஈழத்தில் தமிழர்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் கேட்டுக் கொண்டுள்ளார். ஈழத்தில் நடந்துவரும் போரினால் உயிரை பலரும், பிறந்த நாட்டையே பலரும் இழந்துவரும் இவ்வேளையில், தனி ஒரு மனிதன் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது.இதன் முடிவு என்னவாக இருக்கும் என யூகிக்கும் அரசியல்
சாதுர்யம் எனக்கில்லை. நான் நிஜமாகவே சாதாரணன்.
மனித சோகங்கள் என்னை வெகுவாக பாதிக்கின்றன.இந்தச் சோகச் சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லாவிடினும், அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக் கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில், நம் வீட்டில் குதூகல கொண்டாட்டங்கள் நடப்பது மனிதநேயம் சார்ந்த செயலாக இராது.
வழக்கமாக நான் பிறந்ததை கொண்டாடும் இத்தினத்தை, நான் போற்றும் மொழியை பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே, இறந்து கொண்டிருக்கும் சாமானியருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாக செலவிடுங்கள். இறந்தவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள்.
நான் கமலின் ரசிகனும் அல்ல சினிமா விமர்சகனும் அல்ல. மனிதனை மனிதனாய் பார்க்கும் சாதாரண பாமரன். இப்படி ஈழத்தமிழரின் துன்பதிற்காய் தன் இன்பத்தை மறந்த நம் வீர தமிழனுக்கு இந்த பாமரனின் வாழ்த்துக்கள்.

Friday, October 31, 2008

மதம் தாண்டி மனிதம் வளர்ப்போம்


இந்த உலகத்தில் மிக அதிகமான மக்களை கொண்ட மதமாக கிறிஸ்தவமதம் இருக்கிறது எனலாம். இச்சமயத்தின் கடவுளான இயேசு கிறிஸ்து எருசலேம் நகரங்களில் ஊழியம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பணக்கார இளைஞன் அவரிடம் வந்து நான் மோட்சம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்றான். அதற்கு இயேசு அவனிடம் "நீ பொய் உன் ஆஸ்திகளை விற்று ஏழைகளுக்கு கொடு" என்றார்.
அன்பர்களே இதிலிருந்து நாம் அறிய வரும் கருத்து என்னவென்றால், இயேசு கிறிஸ்து மதத்தை விட மனிதத்தை போதித்தார். இன்று அவருடைய கருத்துக்கள் உலகமெங்கும் ஏற்று கொள்ளபடுகின்றது.
அன்னை திரேசா மதத்தை போதிக்காமல் மனிதத்தை வளர்த்தால்தான் எல்லாராலும் போற்றபடுகிறார். மனிதம் எனபது நம்மை போல பிறரை நேசிப்பதுதான். கண்முன் கஷ்டபடுகிற மனிதனுக்கு கொடுக்காமல், காணாத மகேஷனுக்கு உண்டியலிலும், காணிக்கை பைகளிலும் கொட்டுவது முட்டாள்தனமான செயல் என்றே சொல்வேன். நம் இந்திய தேசத்திற்கு இருக்கின்ற எண்ணிகையில் அடங்காத மதங்கள் போதும். தேவையானதெல்லாம் வீட்டுக்கு ஒரு மரமும், மனிதமும் தான்மரம் வளர்ப்போம்! மனிதம் வளர்ப்போம் !!