Sunday, February 1, 2009

நன்றி சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்

என் இனிய தமிழா!
தமிழ் தாய் ஈன்றெடுத்த முத்து குமரா!
தமிழர்களின் நண்பா- உன் தியாகத்திற்கு
இந்த பாமரன் எழுதும் வெண்பா.

தமிழ் ஈழம் வரும் வரை அல்ல
தமிழ் இனம் வாழும் வரை
நீ வாழ்ந்துக்கொண்டிருப்பாய்
கல்லறையில் அல்ல, எங்கள் கருவறையில்.

எங்கடா போனாய்? - நாம்
தமிழ் ஈழத்தை காணும் முன்பு
நீ முத்து பயலாடா
புதைந்து கிடந்தாலும் புதையலாகவே இருக்கிறாய்!!







Friday, January 9, 2009

தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த உர
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

Thursday, January 8, 2009

கண்ணீர் பொங்கும் விடுதலைப் பொங்கல்!

கண்களில் கண்ணீர் கசிந்து பொங்க,
கோபத்தில் தீயாய் விளாசிப் பொங்க,
பொங்கிய நினைவுகள் மனதிற் பொங்க,
பொங்கலென்ன பொங்கல்? தமிழருக்குப் பொங்கல்?
பொங்குக! பொங்குக! புயலாகப் பொங்குக!

சங்கமமைத்துத் தமிழ் வளர்த்ததெங்களினம்
கறையான் புற்றெடுக்க பாம்பதுபோல், சிங்களவன்
எங்கள் மண்ணினை ஆர்ப்பரித்து நிற்கையிலே
பொங்கலென்ன பொங்கல்? எங்களுக்குப் பொங்கல்?

மூன்று சகாப்தத்தின் முன் பொங்கியது போலவே,
பொங்கிக் கதிரவனுக்குக் காணிக்கை தர ஆவல்,
அப்படியொரு சந்தர்ப்பம் மீண்டும் வரும்வரை
பொங்கலென்ன பொங்கல்? தமிழருக்குப் பொங்கல்?

இயற்கையாய் மாறிடும் காலத்தை ஏற்கலாம்
செயற்கையாய் மாற்றினால் யாரதை ஏற்கலாம்?
பயமூட்டித் தமிழரை அடக்கமுயல் பாவியர்
பழிஏற்று அவர்காலைத் தமிழீழம் நக்குமா?

பொங்குக! பொங்குக! புயலாகப் பொங்குக!
எங்கணும் மங்களம் சுதந்திரம் என்குக!
எங்களின் தேசமெம் கரம் சேர்ந்து மகிழவே
பொங்குக! பொங்குக! தைப்பொங்கல் பொங்குக!

மக்களின் ஆட்சி என்பதன் அர்த்தம் எதுவென உணர்த்திடல் வேண்டும்
மக்களின் உண்மைச் சுதந்திரம் மீண்டும் தமிழ்மண் மலர்ந்திட வேண்டும் திக்கெல்லாம் நிறை தமிழினம் கூடி அதைக்கொண் டாடிட வேண்டும் அக்கதை தமிழரின் சரித்திர நூலில் தங்கத்தில் பதித்திட வேண்டும்!

பொங்கிக் கொண்டிருப்பது விடுதலைப் பொங்கல்
பொங்கப் போவது சுதந்திரப் பொங்கல்!!
தொடங்கும் ஆனந்த கண்ணீர் பொங்கல்!!!

Friday, January 2, 2009

புத்தம் தவறிய இலங்கை பௌத்தர்கள்

பௌத்த மதம் தேசிய மதமாக பின்பற்றுகிற நாடுகளில் ஒன்றுதான் இலங்கை. இந்நாட்டில் பௌத்தம் பரவியதற்கு காரணமாய் இருந்தவர் அசோக மன்னர் இவருடைய ஆட்சிக்காலம் கிமு 273 முதல் கிமு 232 வரை ஆகும். கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார்.புத்த மதத்தை ஆசியாவெங்கும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார்.
இப்படி போரை வெறுத்து புத்தம் ஏற்றுக்கொண்ட அசோகரின் முயற்சி இப்படி வீணாய் போனதே. மற்றவர்கள் படும் துன்பத்தை, இன்னலை காண முடியாமல் துறவறம் பூண்ட புத்தரை பின்பற்றும் இந்த சிங்களர்களுக்கு கொலைவெரிதனமான எண்ணம். தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவம். இதையெல்லாம் தட்டி கேட்க்காமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் புத்த பிட்சுக்கள் என்பதுதான் வேதனை.
புத்தர்க்கு கூட தமிழரை பிடிக்காதா என்ன?

Thursday, November 13, 2008

எங்கே போகும் இந்த பாதை?

குழந்தைகள் தின விழா நவ 14 இந்த வருடம் குழந்தைகள் தின விழா கொண்டும் பொழுது நம் சமுதாயத்தை ஒரு கணம் திரும்பி பார்த்தல் நம் குழந்தைகள் எந்த பாதையை நோக்கி போய் கொண்டிருக்கின்றது என்பதை அறியலாம். வன்முறை கலாச்சாரம் பெருகிகொண்டேயிருக்கிறது எனவும் அறியலாம். இது எங்கிருந்து வருகின்றது என்பதை தேடி அறிவது கஷ்டமாகத்தான் உள்ளது.
குழந்தைகள் வளருகின்ற ஓவவொரு கட்டத்திலும் வன்முறையை பார்த்துதான் வளர்கிறார்கள். வீட்டில் சண்டை, தெருவில் சண்டை, ஜாதி சண்டை,மத சண்டை,மற்றும் கட்சி சண்டை என்றும் கார்டூன் படம் தொடங்கி சினிமா படம் வரை வன்முறைதான் நிரம்பி வழிகிறது. அதை பெற்றோர்கள் முதல் நாட்டு தலைவர்கள் வரை யாரும் கண்டுகொள்வதே இல்லை. இதனால் மிகவும் பாதிப்புக்குள்ளாவது இளைய சமுதாயம்தான். இதனுடைய வெளிப்பாடுதான் நவ 12,2008. சென்னை Dr.அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறை வெளிப்பாடு. எங்கிருந்து வந்தது இந்த ஜாதி வெறி இந்த வயதில், கல்லுரிக்குள் கத்தி கலாசாரம். ஒழுக்கத்தை சொல்லிகொடுக்கும் பாடசாலைகளில் வன்முறை கலாச்சாரம். கல்லூரி முதல்வர்தான் காரணம் என்று மாணவர்களின் குற்றச்சாட்டு. " இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்" என்ற நிலை மாறி நாளைய தீவிரவாதிகளை மாறி வருகின்றனர். நாளுக்கு நாள் குற்றங்களும் குற்றவாளிகளும் அதிகரித்து கொண்டேதான் இருக்கின்றது. ஆகவே இதை சிந்திக்கும்போது ஒருவேளை நம் இளைய சமுதாயம் தடம் புரண்டு ஓடிகொண்டிருகிறதோ? என்ற பயம் கவ்வி பிடிக்கிறது. இதேர்க்கெல்லாம் சமுதாயத்தையும். சுற்று சூழலையும் குறை சொல்லாமல் நம் பிள்ளைகளின் எதிர் காலம் வளமை பெற்றிட உருவாக்குவோம் ஒரு புதிய இளைய சமுதாயம். இந்த குழந்தைகள் தினவிழாவை. அர்த்தமுள்ள சீர்திருத்த நாளாக அனுசரிபோம். மீண்டும் பழைய நேரு மாமா கதைகளை சொல்லி நேர்ரத்தை வீணாக்காமல், வாழ்க்கையின் அடிப்படை தத்துவங்களை சொல்லி தந்து கொண்டாடுவோம். இன்று அம்பேத்கர், முத்துராமலிங்க தேவரை வைத்து சண்டை போட்டவங்க . நேரு மாமா எங்களுக்கு தாய் மாமா என்றும் எங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்றும் சொல்லாதிருக்கட்டும். நாளை விடியல் புதிய விடியலாய் இருக்கட்டும்.

Saturday, November 8, 2008

உணவு கொடுத்த கலைஞர் ஐயா

இந்த (2008) ஆம் வருடம் ஈழ தமிழர்களின் நலன் பற்றி தமிழகம் அதிக அக்கறை கொண்ட வருடம். எல்லா பெரும்பாலான கட்சிகள் இதில் மிக கவனம் எடுத்துகொண்டது. தற்போதைய முதல்வர் தமிழின தலைவர் கலைஞர் கருணாநிதி அய்யா இதில் அதிகமாய் பொறுப்பெடுத்து பணம் திரட்டி உணவு பொருள்களை அனுப்பி வைத்திருக்கிறார். இது மிக பெரிய சாதனை. இதற்க்காகவே அவருக்கு அடுத்த முறை ஓட்டு போடலாம் போல இருக்கு. என்னை போன்ற பாமரனின் ஏக்கமெல்லாம் உணவு வாங்கிகொடுத்த கலைஞர் அய்யா அப்படியே உரிமையும் வாங்கி கொடுங்க. உரிமை என்பதை விலை கொடுத்து வாங்க முடியாதுதான் ஆனால் உங்களுடைய முயற்சியால் நிச்சயம் வாங்கி தர முடயும். உங்கள் தாமதத்தின் அர்த்தம் என்ன? புரிந்துகொள்ள முடியாத பாமரன் நான்.உணவு வாங்கி கொடுதிங்கலே உரிமையும் நீங்க தானே வாங்கித்தரனும்.

Wednesday, November 5, 2008

மனிதநேயம் கொண்ட கமல்

நவ. 7 கமலின் பிறந்தநாள். கமல் ரசிகர்களுக்கு இந்நாள் திருவிழா. இந்த முறை சின்ன மாற்றம். ஈழத்தமிழரின் நலனுக்காக கொடைகொடுத்த வள்ளல்களின் மத்தியில் தனித்து நிற்பவர் நம் உள்ளங்களின்(உலக) நாயகன் பதமஸ்ரீ கமலஹாசன், ஈழத்தில் தமிழர்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் கேட்டுக் கொண்டுள்ளார். ஈழத்தில் நடந்துவரும் போரினால் உயிரை பலரும், பிறந்த நாட்டையே பலரும் இழந்துவரும் இவ்வேளையில், தனி ஒரு மனிதன் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது.இதன் முடிவு என்னவாக இருக்கும் என யூகிக்கும் அரசியல்
சாதுர்யம் எனக்கில்லை. நான் நிஜமாகவே சாதாரணன்.
மனித சோகங்கள் என்னை வெகுவாக பாதிக்கின்றன.இந்தச் சோகச் சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லாவிடினும், அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக் கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில், நம் வீட்டில் குதூகல கொண்டாட்டங்கள் நடப்பது மனிதநேயம் சார்ந்த செயலாக இராது.
வழக்கமாக நான் பிறந்ததை கொண்டாடும் இத்தினத்தை, நான் போற்றும் மொழியை பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே, இறந்து கொண்டிருக்கும் சாமானியருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாக செலவிடுங்கள். இறந்தவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள்.
நான் கமலின் ரசிகனும் அல்ல சினிமா விமர்சகனும் அல்ல. மனிதனை மனிதனாய் பார்க்கும் சாதாரண பாமரன். இப்படி ஈழத்தமிழரின் துன்பதிற்காய் தன் இன்பத்தை மறந்த நம் வீர தமிழனுக்கு இந்த பாமரனின் வாழ்த்துக்கள்.