Wednesday, November 5, 2008

மனிதநேயம் கொண்ட கமல்

நவ. 7 கமலின் பிறந்தநாள். கமல் ரசிகர்களுக்கு இந்நாள் திருவிழா. இந்த முறை சின்ன மாற்றம். ஈழத்தமிழரின் நலனுக்காக கொடைகொடுத்த வள்ளல்களின் மத்தியில் தனித்து நிற்பவர் நம் உள்ளங்களின்(உலக) நாயகன் பதமஸ்ரீ கமலஹாசன், ஈழத்தில் தமிழர்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் கேட்டுக் கொண்டுள்ளார். ஈழத்தில் நடந்துவரும் போரினால் உயிரை பலரும், பிறந்த நாட்டையே பலரும் இழந்துவரும் இவ்வேளையில், தனி ஒரு மனிதன் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது.இதன் முடிவு என்னவாக இருக்கும் என யூகிக்கும் அரசியல்
சாதுர்யம் எனக்கில்லை. நான் நிஜமாகவே சாதாரணன்.
மனித சோகங்கள் என்னை வெகுவாக பாதிக்கின்றன.இந்தச் சோகச் சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லாவிடினும், அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக் கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில், நம் வீட்டில் குதூகல கொண்டாட்டங்கள் நடப்பது மனிதநேயம் சார்ந்த செயலாக இராது.
வழக்கமாக நான் பிறந்ததை கொண்டாடும் இத்தினத்தை, நான் போற்றும் மொழியை பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே, இறந்து கொண்டிருக்கும் சாமானியருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாக செலவிடுங்கள். இறந்தவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள்.
நான் கமலின் ரசிகனும் அல்ல சினிமா விமர்சகனும் அல்ல. மனிதனை மனிதனாய் பார்க்கும் சாதாரண பாமரன். இப்படி ஈழத்தமிழரின் துன்பதிற்காய் தன் இன்பத்தை மறந்த நம் வீர தமிழனுக்கு இந்த பாமரனின் வாழ்த்துக்கள்.

No comments: