Monday, May 16, 2011

கண் வனப்புக் கண்ணோட்டம்;


கால் வனப்புச் செல்லாமை;

எண் வனப்பு, 'இத் துணை ஆம்' என்று உரைத்தல்;

பண் வனப்புக் கேட்டார், நன்று என்றல்;

கிளர் வேந்தன் தன் நாடு வாட்டான், நன்று என்றல் வனப்பு.

கண்ணுக்கழகு கண்ணோட்டம்,

காலுக்கழகு பிறரிடம் பிச்சை கேட்க செல்லாமை,

ஆராய்ச்சிக்கு அழகு தன்கருத்துக்களைத் யாருக்கும் பயப்படாமல் துணிந்து சொல்லுதல்,

இசைக்கு அழகு அந்த இசையை கேட்பவர் நன்று என்று கூறுதல்,

அரசனுக்கு அழகு அவனது ஆட்சியில் உள்ள குடிமக்கள் அவனைநல்லவனென்று கூறுதல்.

----- சிறுபஞ்சமூலம்

Monday, April 25, 2011

நாங்கள் தமிழர்கள்..

நீங்கள் பெட்ரோல்
விலையைக் கூட்டினீர்கள்
நாங்கள் நடக்கப் பழகினோம்...!


நீங்கள் வெங்காய
விலையைக் கூட்டினீர்கள்
நாங்கள் பத்தியம் பழகினோம்...!


இப்போது,
மீனவன் உயிரின்
விலையைக் கூட்டியிருக்கிறீர்கள்
நாங்கள் சாகவும் பழகிக்கொள்வோம்!

ஏனெனில்
நாங்கள் தமிழர்கள்..!

Monday, April 18, 2011

ஓட்டு போட சொன்னா ஓட்டைய போட்ட ரஜினி !!

ஓட்டு போடுவது ஒவ்வொர் இந்திய குடிமகனின் கடமை.யாருக்கு ஓட்டு போடவேண்டும் என யாரும் யாருக்கும் சொல்லித்தர தேவை இல்லை.யாரால் நாம் பாதிப்படைந்து உள்ளோம் என நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டும்.யாரால் நமக்கு கொஞ்சமாவது நன்மை என உணர்ந்து வாக்களியுங்கள் இதில் ரகசியம் தேவை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இது ஒரு நல்ல குடிமகன் நான் சொல்லறது (citizen) கடமை.


கமல் ஹாசன், சூர்யா,வடிவேலு,அஜித்,ஜீவா போன்ற நடிகர்கள் வோட்டு போட்டார்கள் ஆனால் எந்த விஷமத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லைஆனால் நடிகர் ரஜினி கடந்த சில ஆண்டுகளாக ஓட்டு போடும் நேரத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் சூப்பர் டஸ்ட் ஆக மாறிவிடுகிறார். போன முறை தேர்தலில் நான் பிஜேபி க்கு ஓட்டு போட்டேன் என்றும், இந்த முறை மீடியாக்கள் சூழ ஓட்டு போட வந்து அதிமுக வுக்கு ஓட்டு போட்டதாக ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டு இருக்கிறார்.


தேர்தல் நாள் அன்று தனி நபர் பிரசாரம் கூட இருக்க கூடாது என்று தேர்தல் கமிசன் சட்டம் போட்டு எல்லாரையும் பயமுறுத்தியது.ஆனால் எல்லா சேனல்களிலும் ரஜினி சார் யாருக்கு ஓட்டு போட்டார்னு தெரிஞ்சிடுச்சி இப்போ தேர்தல் ஆணையம் என்ன செஞ்சிது. உலககோப்பை ஜெயிச்ச இந்தியா டீம்க்கு முதல்வர் காசு கொடுக்குற மாதிரி போட்டோ வந்தா கிரிகெட் ரசிகர்கள் ஓட்டு திமுகவுக்கு விழுந்திடும்னு தேர்தல் ஆணையம் தடுத்தாங்க. இப்போ ரஜினிக்கு எந்த நடவைக்கையும் எடுக்காத காரணம் என்ன? இதுதான் ஆரியத்தின் சூழ்ச்சி. என்னடா சாதியம் பேசுகிறானே என நினைக்கவேண்டாம். சாதியம் வேறு ஆரியம் வேறு.


இந்தத் தேர்தலில் சோ சொல்லும் அறிவுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்த ரகசியம். திரைமறை அதிமுக பிரச்சாரகரான இவர் ர‌ஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருவரும் தனியாக ஒரு மணிநேரம் பேசியுள்ளனர். சோ வின் துக்ளக் பத்திரிக்கை விழாவில் அவர் பேசிய பேச்சுக்கள் அவர் யாருக்காக எதை மையபடுத்தி பேசினார் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அன்பர்கள் யார் என்றெல்லாம் நாம் அறிவோம். அக்கூட்டத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் போன்றோர் ஜெயலலிதாவுடன் இணையவேண்டும் என்று சொன்னார். அது நிறைவேறி இருக்கிறது இதை அரசியல் தந்திரம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் உலக நாயகன் கமல் ஓட்டு போடுவதை கண்டுகொள்ளாத மீடியா ரஜினி விசயத்தில் எல்லை மீறியது ஏன்?


தப்பை நான் நேரடியாக தட்டி கேட்பேன் நான் பயப்பட மாட்டேன் என்றெல்லாம் படத்திலும் மேடைகளிலும் வசனம் பேசும் ரஜினி சாருக்கு ஓட்டு போடும்போது மத்தவங்க பாக்க கூடாதுன்னு தெரியாதா? ஓட்டு போட்டு முடித்தவுடன் தனக்கு வழிவிட சொல்லி பத்திரிக்கைகாரர்களை விலக சொல்லி அவர்கள் விலகியவுடன் நடந்து செல்லும் ரஜினிக்கு ஒட்டு போடும்போது சொல்ல தெரியலையா? இல்லை சோ சொல்லி தரலையா? ஆரியம்தான் "சொன்னதை செய்வோம்" என நிருபித்து இருக்கிறது, சபாஷ்!!.

யாருக்கு ஓட்டு போடுறோம் என்பது தெரியகூடாதுன்னுதான் வாக்குபதிவு இயந்திரத்தை மூடிவச்சி இருக்காங்க, தேர்தல் ரிசல்ட் சீக்கிரம் வந்தால் அது மற்ற மாநிலங்களில் வாக்கு பதிவை பாதிக்கும் என மே மாதம் 13 வரை தள்ளி போட்டு இருக்காங்க என்பதெல்லாம் நாம் அறிந்ததே. ஆனால் எல்லாத்தையும் முட்டாளாக்கி சூப்பர் டஸ்ட் ஆகி இருக்கிறார் மிஸ்டர் ரஜினிகாந்த்.

சீனியர் சிட்டிசன் ஆகியும் ஓட்டு போடுற நாகரிகம் தெரியாத ரஜினிக்கு சொல்லணும் இது நீங்க நடிக்கிற ரீல் இல்ல ரியல், தப்பு பண்ணுனா செகண்ட் சாட் எடுக்க முடியாது.    எங்கயாவது சாரை பாத்திங்கனா சொல்லிடுங்க ப்ளீஸ். 

Friday, April 8, 2011

மறக்குமா நெஞ்சம்?? என்றைக்கும் மறக்க மாட்டோம்...!!

அன்பு நண்பர்களே 2 நிமிடம் இதை படித்து விட்டு நீங்கள் உங்கள் வாக்குகள் யாருக்கு என்று நிர்ணயம் செய்யவும். இன்றைக்கு சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்பேன் என ஜெயலலிதா சொல்லுவது "சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது" .


சிறுபான்மை இனமான கிறிஸ்தவ வாக்காளர்களே யோசித்து வாக்களிக்கவும்.

2002 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் வாரத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா அரசு கொண்டு வந்ததா? இல்லையா? அதைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தபோது, அவைகளை ஜெயலலிதா உதாசீனப்படுத்தி, சிறு பான்மையின மக்களின் நலன்களையும், உரிமை களையும் பாதிக்கச் செய்தாரா? இல்லையா?

2003 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் போப்பாண்டவரே கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை கண்டித்த போது, போப்புக்கு அதற்கான எந்தவிதமானஅதிகாரமும் உரிமையும் கிடையாது என்று ஜெய லலிதா அறிக்கை விடுத்து சிறுபான்மையினரான கிறித்தவர்களின் மனதை நோக அடித்தது உண்டா, இல்லையா?

சட்டப் பேரவையில் 31-10-2002 அன்று ஜெயலலிதா ஆட்சியில் மத மாற்றத் தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

தி.மு.கழக ஆட்சியில்தான் தமிழ்நாடு கட்டாய மத மாற்றத் தடை (நீக்கச்) சட்ட முன் வடிவு 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 31-5-2006 அன்று அந்தச் சட்ட முன் வடிவு ஆய்வு செய்யப் பட்டு நிறை வேற்றப்பட்டது

2003ஆம் ஆண்டும் இது போலவே தான் கட்சியின் சார்பில் இஃப்தார் நிகழ்ச் சியை ஏற்பாடு செய்து, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த வர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பி அழைத்து விட்டு, கடைசி நிமிடத்தில் அந்த விழாவிற்கு தான் செல்லாமல் தவிர்த்தார். வீட்டிற்கு விருந்தினர்களையெல்லாம் சாப்பிட வாருங்கள் என்று அழைத்துவிட்டு, அவர் கள் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது வீட்டைப் பூட்டி விட்டு செல்பவர்களுக்கும் ஜெயலலிதா விற்கும் வேறுபாடு உண்டா?

23-8-2001 ஆம் நாளன்று சட்டசபையில் திருமாவளவன் “இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்; அதை நடைமுறைப்படுத்த நான் ஆணையிடுவேன் என்று இஸ்லாமியர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பேசியது எனக்கு நினைவு இருக்கிறது. ஆகவே, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?” என்று ஜெயலலிதாவைக் கேட்டபோது, “அப்படிப்பட்ட உத்தரவாதத்தைத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்; நான் அல்ல” என்று கூறியவர்தான் ஜெயலலிதா. கழக ஆட்சி 2006-ல் பொறுப்பேற்ற பின்புதான், 22-10-2007 ஆம் நாளன்று, தமிழ்நாடு கிறித்தவ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.



1992 ல் இஸ்லாமியர்களின் மசூதியை இடிக்க சென்னையில் இருந்து கரசேவகர்களை அனுப்பினார் எனபதற்கு ஜெயலலிதா மீது ஆதாரமான குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு மசூதி இடிக்க அனுப்பிய இவர் சென்னை அயோத்தி குப்பத்தில் இருக்கும் மசூதியை இடிக்கமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?



சிறுபான்மை மக்களின் எதிரியாக கருதப்பட்டு, பல இஸ்லாமியர்களின் சாவுக்கு காரணமான திரு. நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க அரசால் மனிதநேயமற்ற காட்டு மிராண்டியாக கருதப்பட்டு தன் நாட்டுக்குள் வர தடை விதித்துள்ள நிலையில், குஜராத்திலிருந்து சென்னை வரும்போதெல்லாம் அன்பு சகோதிரி ஜெயலலிதாவை பார்க்காமல் செல்லமாட்டார். (உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று - இது பழமொழி)


இந்த பெண்மணியை பற்றி அவர்களுடைய அரசியல் சாணக்கியர் சோ (பழைய காமடி பீஸ்) சொல்லும்போது ஜெயலலிதாவிடம் நான் ஆண் குனங்களைத்தான் காணுகிறேன். நல்லா யோசிச்சி பாருங்க இப்படி பட்ட சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள் மற்றும் தலித் மக்களின் நிலை என்ன?


காஞ்சி சங்கராச்சாரியார்களைக் கைது செய்த ஜெயலலிதா பொய் வழக்கில் கிறிஸ்தவ இஸ்லாமிய மற்றும் தலித் சாமியார்களை கைது செய்வது எம்மாத்திரம்?

ரேஷன் கார்டுகளில் H முத்திரை ரூ. 5,000 மாத வருமானம் உள்ள குடும்பத்தினரின் ரேசன் அட்டைகளில் இந்த முத்திரையைக் குத்திய ADMK அரசு,அவர்களுக்கு ரேசனில் எந்தப் பொருளும் தரப்படாது என்று அறிவித்தது.

தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லாதவர், முதல்வராகவும் இருக்கத் தகுதி இல்லை, எனவே அவர் முதல்வராக இருந்த நான்கு மாத காலங்களும் செல்லாதுNull and Invaஎன 21, செப்டம்பர் 2001 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆடிய பேயாட்டத்தில் மக்கள் பட்ட துன்பம் ஒன்றா, இரண்டா?

1. எஸ்மா, டெஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி, 1,70,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்க்ளை வேலை நீக்கம் செய்தது. பெண்கள் என்றும் பாராமல் நடு இரவில் அவர்களை வீடு தேடிச் சென்று கைது செய்து சிறையில் அடைத்தது.

2. திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது

3. பல வண்ணங்களில் குட்ம்ப அட்டைRati வழங்கியும், H முத்திரை குத்தியும் மக்களைப் பாடாய்ப்படுத்தியது.

4. கட்டாய மதமாற்றத் தடுப்பு சட்டம்

5. பேருந்து கட்டணங்களை உயர்த்தியது.

6. பத்திரிகை ஆசிரியர்களை கைது செய்து சிறையில் தள்ளியது.

அவரது பேயாட்டம் 2004 பாராளுமன்ற தேர்தல் முடிவு வரும் வரை தொடர்ந்தது.

2003 ல், காலம் காலமாக நடைபெற்று வந்த கிறிஸ்தவ கூட்டங்கள் மற்றும் பெருவிழாக்கள் நடக்கும் சீரணி அரங்கத்தை இடித்து தரைமட்டமாகியது புண்ணியவதி ஜெயலலிதாவின் ஆட்சி. ''ரமலான் பக்ரீத் பெருநாட்களின் போது சிறப்பு தொழுகைகள் மெரீனா கடற்கரையில்தான் காலம்காலமாக நடந்துக்கொண்டிருந்தது. அதை தடுத்துவிட்டார்கள்.

சீரணி அரங்கத்தை இடித்த ஜெயலிதாவிற்கு, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் கூட்டம் நடத்தக்கூடாது என சட்டம் போட தெரியாதா என்ன?

கருணாநிதியின் ஆட்சி கொடுங்கோல் சர்வாதிகாரி ஆட்சி என ஜெயலலிதா சொல்லுகிறார்(எப்படி எப்படி !!) சில நேரங்களில் ஜெயலிதா காமெடி பண்ணுவார். சர்வாதிகாரம் என்பதற்கு தமிழ் அகராதியில் ஜெயலிதாவின் பெயரை பதிக்க வேண்டும்.


சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் 425 கோடி ரூபாய் செலவில் புதிய சட்டசபை கட்டப்பட்டு இருக்கிறது. இந்த அம்மா ஜெயிச்சா( ஐயோ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேங்க!!) அங்க போக மாட்டாங்களாம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போவாங்களாம்(எப்புடி?). இது (sorry இந்த அம்மா) சர்வதிகாரத்தை பத்தி பேசுது.

கிறிஸ்தவர்கள் அழுதபோது நம்மோடு தோள்கொடுத்து நின்றவர் கலைஞர் கருணாநிதி என்பதை பைபிள் தூக்கும் கிறிஸ்தவர்கள் யாரும் மறந்து போக மாட்டார்கள்.

ஜெயலலிதாவின் கூற்றினை யார் நம்புகிறார்களோ, இல்லையோ, சிறுபான்மை சமுதாயத்தினர் நிச்சயமாக நம்ப மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி

“என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.” - மல்கியா 4:2

” இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்!! மௌனமாயிருக்காதே.



Monday, April 4, 2011

கண்ணுக்கு முன்னாடி நடந்த விபரீத கொடுமை


கொஞ்சம் பெரியவங்க மட்டும் படிங்க ப்ளீஸ்
ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ரெட்டை ஏரி வழியா போய்கிட்டு இருக்குறப்போ பார்த்த காட்சிமீசை வச்ச முகம் குள்ளமான உயரம் ஆண்களுக்கான உடலமைப்பு கரகரத குரல் இதென்ன வித்தியாசமான கோலம் அது வேற யாரும் இல்லைங்க ஒம்போது னு சொல்லற அரவானிங்கஒரு லாரி டிரைவர் ஒருத்தன் அதுகிட்ட சண்டை போட்டுகிட்டு இருந்தான் கொஞ்சம் வண்டியை நிறுத்திட்டு கவனிச்சேன்.அசிங்க அசிங்கமா ரெண்டு பேரும் பேசி திட்டிகினாங்க.

அவங்க ரெண்டு பேரும் பேசுன உரையாடலை அப்படியே எழுதி இருக்கேன் படிங்க
டேய் எச்ச பாடு இன்னும் 50 ரூபா தாடா காசு தராம இங்க இருந்து எப்படி போவணு பாக்கலாம் னு அரவாணி சொல்லபோடி தேவடியா முண்ட உன்னோட முகத்துக்கு இதுவே அதிகம் இதுலே எக்ஸ்ட்ரா வேற வேணுமா உன்ன போலீஸ்  புடிச்சி குடுத்துடுவேன்னு டிரைவர் சொல்ல வாக்குவாதம் சூடு பிடிச்சிது.
டேய் பொட்ட இது பண்ணுறதுக்கு முன்னாடி தெரிஞ்சி இருக்கணும் எல்லாம் முடிச்சிட்டு இப்போ போலீஸ்  புடிச்சி குடிதுடுவாரமேனு சொல்லநீ என்ன பொம்பளையா கேட்ட காச குடுக்குறதுக்கு ஒம்போது தானே ரொம்ப பேசுன வெட்டிடுவேன்னு சொல்ல அங்க கூட்டம் கூடிவிட்டதுகூடத்தில் ஒருவானாக நானும் பாத்துகிட்டு இருந்தேன்நான் பொட்டைனு தெரிஞ்சுதான என்கிட்டே வந்த பொறம்போக்குன்னு அவனை அடிக்க போனது அரவாணிமேல கைய வைக்கிற வேலையெல்லாம் வச்ச உன்னை கொன்னுடுவேன்னு டிரைவர் சொல்ல.
ரோட்டல சண்டை போடாம கொடுக்குறத வாங்கினு போவியா ரோட்டல அசிங்கம் பண்ணிகினு இருக்கியே னு ஒரு வெள்ளை சட்டை போட்ட பெரிய மனுஷன் சொல்லரெண்டுபேரையும் போலீஸ் டேசன் கூட்டிட்டு போங்கனு இன்னொருத்தர் சொல்லஎதுக்கு சார் ரெண்டு போரையும் கூட்டிகிட்டு போகணும் இந்த பொட்டை தேவடியாள புடிச்சி குடுக்கணும் இவளுங்க கூட்டமே இதுக்குதான் அலையுதுஎங்கயாவது கண்ணுக்கு மறைவா இருந்த கூட்டம் இப்போ ரொம்பவே ஆடுதுங்க
தனக்கு எதிராக கூட்டம் கூடுவதை அறிந்த அரவாணி தன்னுடைய குரலையும் வார்த்தைகளின் அசிங்கத்தையும் அதிகமாக உயர்த்தியதுஎவனவாது ரொம்ப பேசினிங்க மகனே தூக்கிட்டு நின்னுடுவேன்அவசரத்துக்கு அலைஞ்சிட்டு எங்ககிட்ட வருவானுங்க அப்புறம் முடிஞ்சதும் வேலைய காடுவானுங்கபேசிக்கொண்டிருக்கும் போதே அவளை அடித்தான் அவளிடம் சண்டை போட்ட லாரி டிரைவர்கோபமடைந்த அரவாணி அவனை கிழே தள்ளி விட்டு அவன் மீது இசை துப்பினாள்.
அவ்வளவுதான் அடிப்பட்ட அந்த தியாகியை ஆதரித்து பல ஆம்பிளை சிங்கங்கள் அந்த அரவாணியை தாக்கினர்ஒரு பொட்டை பல ஆம்பிளை சிங்கங்கள் தாக்கிகொண்டிருந்தனர்சில நொடிகளில் அந்த அரவாணி நிலை குலைந்ததுகண் சிவப்பாகி வாயெல்லாம் ரத்தம் முகமெல்லாம் வீக்கம்பார்கவே பரிதாபமான நிலைமை.
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பல பேருக்கு(என்னையும் சேர்த்துநடப்பது அநியாயம் என்று தெரிந்தும் பேசமுடியாமல் பார்த்துகொண்டிருந்தனர்ஒரே ஒரு பெரியவர் மட்டும் அந்த அரவாணியை பார்த்து நீ போய்டு இங்க இருந்தா அடிச்சி கொனுடுவாங்கனு சொன்னார்வாங்கின அடியில் நடக்க முடியால் நொண்டின அந்த அரவாணிக்கு ஆட்டோ புடிச்சி கொடுத்தார் ஒரு ஜென்டில் மேன்அது நான் தான்இவ்ளோ நேரம் அமைதியா இருந்ததுக்கு பிராயசித்தம் தேடிக்கொண்டேன்
 தமிழ்நாட்டில் அரவாணிகள் நலவாரியம் என்று ஒன்று இருக்கும்போதே இப்படிஎல்லாம் கொடுமைகள் அரவாணிகளுக்கு நடக்கிறதே என நினைத்து வேதனை பட்டேன் ஆனால் கண்ணுக்கு முன்பாக நடந்த அக்கிரமத்தை பார்த்து ஒரு ஆண்மகனாக அதை தட்டி கேக்க முடியாத கோழையாக இருக்கிறேனே என வெக்கப்பட்டேன்.
கூட்டம் கலைந்த பிறகு என் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது பைபிளில் ஒரு சம்பவம் நினைவுக்கு வந்ததுஇயேசு கிறிஸ்துவிடம் விபச்சாரம் செய்த பெண்ணை கொண்டுவந்து நிறுத்தி இவள் சட்டப்படி கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் நீர் என்ன சொல்லுகிறீர் என்று சில பெரிய மனுசங்க கேட்டாங்க
அதற்கு இயேசு கிறிஸ்து உங்களில் பாவம் செய்யாதவன் முதலில் இந்த பெண்ணின் மீது கல்லெறியட்டும் மற்றவர்கள் பின்பு எறியுங்கள் என்றார் ஆனால் ஒருவரும் கல் எரியாமல் போய்விட்டார்கள்இயேசு கிறிஸ்து அந்தபெண்ணை பார்த்து சொன்னார் நீ போ இனி பாவம் செய்யாதே என்றார்.

நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரியும்னு நினச்சி இதை முடிச்சிக்குறேன்நன்றி