கொஞ்சம் பெரியவங்க மட்டும் படிங்க ப்ளீஸ்
ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ரெட்டை ஏரி வழியா போய்கிட்டு இருக்குறப்போ பார்த்த காட்சி. மீசை வச்ச முகம் குள்ளமான உயரம் ஆண்களுக்கான உடலமைப்பு கரகரத குரல் இதென்ன வித்தியாசமான கோலம் அது வேற யாரும் இல்லைங்க ஒம்போது னு சொல்லற அரவானிங்க. ஒரு லாரி டிரைவர் ஒருத்தன் அதுகிட்ட சண்டை போட்டுகிட்டு இருந்தான் கொஞ்சம் வண்டியை நிறுத்திட்டு கவனிச்சேன்.அசிங்க அசிங்கமா ரெண்டு பேரும் பேசி திட்டிகினாங்க.
அவங்க ரெண்டு பேரும் பேசுன உரையாடலை அப்படியே எழுதி இருக்கேன் படிங்க
டேய் எச்ச பாடு இன்னும் 50 ரூபா தாடா காசு தராம இங்க இருந்து எப்படி போவணு பாக்கலாம் னு அரவாணி சொல்ல. போடி தேவடியா முண்ட உன்னோட முகத்துக்கு இதுவே அதிகம் இதுலே எக்ஸ்ட்ரா வேற வேணுமா உன்ன போலீஸ் ல புடிச்சி குடுத்துடுவேன்னு டிரைவர் சொல்ல வாக்குவாதம் சூடு பிடிச்சிது.
டேய் பொட்ட இது பண்ணுறதுக்கு முன்னாடி தெரிஞ்சி இருக்கணும் எல்லாம் முடிச்சிட்டு இப்போ போலீஸ் ல புடிச்சி குடிதுடுவாரமேனு சொல்ல. நீ என்ன பொம்பளையா கேட்ட காச குடுக்குறதுக்கு ஒம்போது தானே ரொம்ப பேசுன வெட்டிடுவேன்னு சொல்ல அங்க கூட்டம் கூடிவிட்டது. கூடத்தில் ஒருவானாக நானும் பாத்துகிட்டு இருந்தேன். நான் பொட்டைனு தெரிஞ்சுதான என்கிட்டே வந்த பொறம்போக்குன்னு அவனை அடிக்க போனது அரவாணி. மேல கைய வைக்கிற வேலையெல்லாம் வச்ச உன்னை கொன்னுடுவேன்னு டிரைவர் சொல்ல.
ரோட்டல சண்டை போடாம கொடுக்குறத வாங்கினு போவியா ரோட்டல அசிங்கம் பண்ணிகினு இருக்கியே னு ஒரு வெள்ளை சட்டை போட்ட பெரிய மனுஷன் சொல்ல. ரெண்டுபேரையும் போலீஸ் டேசன் கூட்டிட்டு போங்கனு இன்னொருத்தர் சொல்ல. எதுக்கு சார் ரெண்டு போரையும் கூட்டிகிட்டு போகணும் இந்த பொட்டை தேவடியாள புடிச்சி குடுக்கணும் இவளுங்க கூட்டமே இதுக்குதான் அலையுது. எங்கயாவது கண்ணுக்கு மறைவா இருந்த கூட்டம் இப்போ ரொம்பவே ஆடுதுங்க.
தனக்கு எதிராக கூட்டம் கூடுவதை அறிந்த அரவாணி தன்னுடைய குரலையும் வார்த்தைகளின் அசிங்கத்தையும் அதிகமாக உயர்த்தியது. எவனவாது ரொம்ப பேசினிங்க மகனே தூக்கிட்டு நின்னுடுவேன். அவசரத்துக்கு அலைஞ்சிட்டு எங்ககிட்ட வருவானுங்க அப்புறம் முடிஞ்சதும் வேலைய காடுவானுங்க. பேசிக்கொண்டிருக்கும் போதே அவளை அடித்தான் அவளிடம் சண்டை போட்ட லாரி டிரைவர். கோபமடைந்த அரவாணி அவனை கிழே தள்ளி விட்டு அவன் மீது இசை துப்பினாள்.
அவ்வளவுதான் அடிப்பட்ட அந்த தியாகியை ஆதரித்து பல ஆம்பிளை சிங்கங்கள் அந்த அரவாணியை தாக்கினர், ஒரு பொட்டை பல ஆம்பிளை சிங்கங்கள் தாக்கிகொண்டிருந்தனர். சில நொடிகளில் அந்த அரவாணி நிலை குலைந்தது. கண் சிவப்பாகி வாயெல்லாம் ரத்தம் முகமெல்லாம் வீக்கம். பார்கவே பரிதாபமான நிலைமை.
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பல பேருக்கு(என்னையும் சேர்த்து) நடப்பது அநியாயம் என்று தெரிந்தும் பேசமுடியாமல் பார்த்துகொண்டிருந்தனர். ஒரே ஒரு பெரியவர் மட்டும் அந்த அரவாணியை பார்த்து நீ போய்டு இங்க இருந்தா அடிச்சி கொனுடுவாங்கனு சொன்னார். வாங்கின அடியில் நடக்க முடியால் நொண்டின அந்த அரவாணிக்கு ஆட்டோ புடிச்சி கொடுத்தார் ஒரு ஜென்டில் மேன். அது நான் தான். இவ்ளோ நேரம் அமைதியா இருந்ததுக்கு பிராயசித்தம் தேடிக்கொண்டேன்.
தமிழ்நாட்டில் அரவாணிகள் நலவாரியம் என்று ஒன்று இருக்கும்போதே இப்படிஎல்லாம் கொடுமைகள் அரவாணிகளுக்கு நடக்கிறதே என நினைத்து வேதனை பட்டேன் ஆனால் கண்ணுக்கு முன்பாக நடந்த அக்கிரமத்தை பார்த்து ஒரு ஆண்மகனாக அதை தட்டி கேக்க முடியாத கோழையாக இருக்கிறேனே என வெக்கப்பட்டேன்.
கூட்டம் கலைந்த பிறகு என் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது பைபிளில் ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இயேசு கிறிஸ்துவிடம் விபச்சாரம் செய்த பெண்ணை கொண்டுவந்து நிறுத்தி இவள் சட்டப்படி கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் நீர் என்ன சொல்லுகிறீர் என்று சில பெரிய மனுசங்க கேட்டாங்க.
அதற்கு இயேசு கிறிஸ்து உங்களில் பாவம் செய்யாதவன் முதலில் இந்த பெண்ணின் மீது கல்லெறியட்டும் மற்றவர்கள் பின்பு எறியுங்கள் என்றார் ஆனால் ஒருவரும் கல் எரியாமல் போய்விட்டார்கள். இயேசு கிறிஸ்து அந்தபெண்ணை பார்த்து சொன்னார் நீ போ இனி பாவம் செய்யாதே என்றார்.
நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரியும்னு நினச்சி இதை முடிச்சிக்குறேன். நன்றி
No comments:
Post a Comment