Monday, April 18, 2011

ஓட்டு போட சொன்னா ஓட்டைய போட்ட ரஜினி !!

ஓட்டு போடுவது ஒவ்வொர் இந்திய குடிமகனின் கடமை.யாருக்கு ஓட்டு போடவேண்டும் என யாரும் யாருக்கும் சொல்லித்தர தேவை இல்லை.யாரால் நாம் பாதிப்படைந்து உள்ளோம் என நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டும்.யாரால் நமக்கு கொஞ்சமாவது நன்மை என உணர்ந்து வாக்களியுங்கள் இதில் ரகசியம் தேவை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இது ஒரு நல்ல குடிமகன் நான் சொல்லறது (citizen) கடமை.


கமல் ஹாசன், சூர்யா,வடிவேலு,அஜித்,ஜீவா போன்ற நடிகர்கள் வோட்டு போட்டார்கள் ஆனால் எந்த விஷமத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லைஆனால் நடிகர் ரஜினி கடந்த சில ஆண்டுகளாக ஓட்டு போடும் நேரத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் சூப்பர் டஸ்ட் ஆக மாறிவிடுகிறார். போன முறை தேர்தலில் நான் பிஜேபி க்கு ஓட்டு போட்டேன் என்றும், இந்த முறை மீடியாக்கள் சூழ ஓட்டு போட வந்து அதிமுக வுக்கு ஓட்டு போட்டதாக ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டு இருக்கிறார்.


தேர்தல் நாள் அன்று தனி நபர் பிரசாரம் கூட இருக்க கூடாது என்று தேர்தல் கமிசன் சட்டம் போட்டு எல்லாரையும் பயமுறுத்தியது.ஆனால் எல்லா சேனல்களிலும் ரஜினி சார் யாருக்கு ஓட்டு போட்டார்னு தெரிஞ்சிடுச்சி இப்போ தேர்தல் ஆணையம் என்ன செஞ்சிது. உலககோப்பை ஜெயிச்ச இந்தியா டீம்க்கு முதல்வர் காசு கொடுக்குற மாதிரி போட்டோ வந்தா கிரிகெட் ரசிகர்கள் ஓட்டு திமுகவுக்கு விழுந்திடும்னு தேர்தல் ஆணையம் தடுத்தாங்க. இப்போ ரஜினிக்கு எந்த நடவைக்கையும் எடுக்காத காரணம் என்ன? இதுதான் ஆரியத்தின் சூழ்ச்சி. என்னடா சாதியம் பேசுகிறானே என நினைக்கவேண்டாம். சாதியம் வேறு ஆரியம் வேறு.


இந்தத் தேர்தலில் சோ சொல்லும் அறிவுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்த ரகசியம். திரைமறை அதிமுக பிரச்சாரகரான இவர் ர‌ஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருவரும் தனியாக ஒரு மணிநேரம் பேசியுள்ளனர். சோ வின் துக்ளக் பத்திரிக்கை விழாவில் அவர் பேசிய பேச்சுக்கள் அவர் யாருக்காக எதை மையபடுத்தி பேசினார் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அன்பர்கள் யார் என்றெல்லாம் நாம் அறிவோம். அக்கூட்டத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் போன்றோர் ஜெயலலிதாவுடன் இணையவேண்டும் என்று சொன்னார். அது நிறைவேறி இருக்கிறது இதை அரசியல் தந்திரம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் உலக நாயகன் கமல் ஓட்டு போடுவதை கண்டுகொள்ளாத மீடியா ரஜினி விசயத்தில் எல்லை மீறியது ஏன்?


தப்பை நான் நேரடியாக தட்டி கேட்பேன் நான் பயப்பட மாட்டேன் என்றெல்லாம் படத்திலும் மேடைகளிலும் வசனம் பேசும் ரஜினி சாருக்கு ஓட்டு போடும்போது மத்தவங்க பாக்க கூடாதுன்னு தெரியாதா? ஓட்டு போட்டு முடித்தவுடன் தனக்கு வழிவிட சொல்லி பத்திரிக்கைகாரர்களை விலக சொல்லி அவர்கள் விலகியவுடன் நடந்து செல்லும் ரஜினிக்கு ஒட்டு போடும்போது சொல்ல தெரியலையா? இல்லை சோ சொல்லி தரலையா? ஆரியம்தான் "சொன்னதை செய்வோம்" என நிருபித்து இருக்கிறது, சபாஷ்!!.

யாருக்கு ஓட்டு போடுறோம் என்பது தெரியகூடாதுன்னுதான் வாக்குபதிவு இயந்திரத்தை மூடிவச்சி இருக்காங்க, தேர்தல் ரிசல்ட் சீக்கிரம் வந்தால் அது மற்ற மாநிலங்களில் வாக்கு பதிவை பாதிக்கும் என மே மாதம் 13 வரை தள்ளி போட்டு இருக்காங்க என்பதெல்லாம் நாம் அறிந்ததே. ஆனால் எல்லாத்தையும் முட்டாளாக்கி சூப்பர் டஸ்ட் ஆகி இருக்கிறார் மிஸ்டர் ரஜினிகாந்த்.

சீனியர் சிட்டிசன் ஆகியும் ஓட்டு போடுற நாகரிகம் தெரியாத ரஜினிக்கு சொல்லணும் இது நீங்க நடிக்கிற ரீல் இல்ல ரியல், தப்பு பண்ணுனா செகண்ட் சாட் எடுக்க முடியாது.    எங்கயாவது சாரை பாத்திங்கனா சொல்லிடுங்க ப்ளீஸ். 

No comments: