Monday, April 25, 2011

நாங்கள் தமிழர்கள்..

நீங்கள் பெட்ரோல்
விலையைக் கூட்டினீர்கள்
நாங்கள் நடக்கப் பழகினோம்...!


நீங்கள் வெங்காய
விலையைக் கூட்டினீர்கள்
நாங்கள் பத்தியம் பழகினோம்...!


இப்போது,
மீனவன் உயிரின்
விலையைக் கூட்டியிருக்கிறீர்கள்
நாங்கள் சாகவும் பழகிக்கொள்வோம்!

ஏனெனில்
நாங்கள் தமிழர்கள்..!

No comments: