Tuesday, November 4, 2008

ஊனம் மனதிலா? மனிதரிலா?

அரவாணிகள் நலவாரியம் உருவாகிவிட்ட போதிலும் இன்னும் அரவாணி சகோதரிகளின் நலன் பேனபடுகிறதா எனபது கேள்வி குறியாகவே உள்ளது. இச்சுழலில் என்னை வெகுவாய் பாதித்த விஷயம் "அரவாணி சகோதரிகளை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்த்து சலுகை வழங்க வேண்டுமாம்". வியத்தகு கொடுமை. ஊனமில்லாது, சகமனிதரை போன்று வாழுகின்ற ஒருவரை எப்படி ஊனம் என்று சொல்ல முடியும்.
ஊனம் என்பது, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதைக் குறிக்கும். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊனம் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் ஏற்படலாம் அல்லது பிறப்பிலேயே இருக்கலாம்.மேற்கண்ட எந்த குறைபாடும் இல்லாத ஒருவரை இப்படி ஊனம் என்று சொல்ல முடியும். சலுகைகள் வேண்டுமென்றால் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்க சொல்லலாமே தவிர ஊனமுற்றவர் பட்டியலில் சேர்க்க சொல்ல்வது என்பது சமுதாய ஊனத்தையே சுட்டி காட்டுகிறது.
அரவாணி சகோதரிகளை பார்த்தாலே ஏதோ பாலியல் குறைபாடு உள்ளவர்களாகவே நாம் நினைக்கிறோம். நான்கு கால்களோடு பிறக்க வேண்டிய மிருகம் ஐந்து கால்களோடு பிறந்தால் அது அதிசயம், செய்தி ஊடகங்கள் அதை பெருமையாய் வெளிக்காட்டுகின்றன. ஆனால் ஒரு ஆணாக பிறந்த ஒருவர் மாற்று பாலின பெண்ணாக மாறுவதை ஏற்க மறுக்கிறது. என்ன கொடுமை.
டயோனசர் என்ற பார்க்காத மிருகத்தை பற்றி ஆரய்ந்து அதன் எலும்புகளை, முட்டைகளை பாதுகாக்கும் இந்த உலகம், கண்ணனுக்கு முன் இருக்கும் இந்த மக்களை பற்றி எண்ணாமல் இருப்பது விந்தையே. இந்திய தேசத்து நலனுக்காக ஒரு காந்தி இருந்தார். மிருகங்களின் நலுனுக்காக ஒரு மேனகா காந்தி, இப்படி மிருகங்களை விட மோசமாய் மதிக்கப்டும் இம்மக்களுக்கு எந்த காந்தி வருவார்.
"மனதில் ஊனம் இல்லாத யாரும் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க முடியும்" இவங்க ஊனம் இல்லை, இவங்களை ஊனமாய் பார்க்கிற சமுதாயம் தான் ஊனம். ஆனால் அது நீங்க இல்லை.


No comments: