
தவளை இனம் வெகுவாக அழிந்து வருவதைத் தடுக்க சர்வதேச அமைப்புகளான நெதர்லாந்தில் உள்ள “வேல்டு அசோசியேசன் ஆப் சூஸ் அன்ட் அக்குவேரியம்ஸ்’ (WAZA), வேல்டு கன்சர்வேஷன் யூனியன் (WCU),ஸ்பீசியஸ் சர்வைவல் கமிஷன்(SSC), அமெரிக்காவில் உள்ள கன்சர்வேஷன் பிரீடிங் குரூப் (CBGA) உள்ளிட்ட அமைப்புகள் இது பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தவளைகளை வேண்டுமானால் புத்தகத்தில் பார்த்துகொள்ளலாம். ஆயிர கணக்கான ஈழ தமிழ் மக்கள் படுகொலை செய்யபடுகிறார்கள் அடித்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு விரட்டபடுகிறார்கள். இதை பற்றி எந்த சர்வதேச அமைப்புகள் கவலைபடுகிறது. இன்னல்படுகிற மக்களுக்கு உணவும் பணமும் தந்தால் போதுமா? நிம்மதியான வாழ்க்கைக்கு யார் வழி செய்வது? தவளைக்கு கவலைப்படும் நம் சமுதாயம் ஏன் தமிழர்களுக்கு கவலை படமாட்டேங்கிறது? சரி தமிழனை பற்றி இன்னொரு தமிழனே கவலைபடாதபோது சர்வதேச சங்கங்களுக்கு என்ன வந்தது?ஆனால் தவளைக்கு இருக்கும் சர்வதேச மரியாதையை கூட என் இன மக்களுக்கு இல்லை என்பதே வருத்தம்.ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை பாடத்தில் படித்துதான் தெரிய வேண்டிய காலம் வந்துவிடுமோ என்ற பயமும் நம்மை ஆட்கொள்ளதான் செய்கிறது. காலம் தான் பதில் சொல்லும். நாம் சொல்ல வைப்போம்.
No comments:
Post a Comment