
குழந்தைகள் வளருகின்ற ஓவவொரு கட்டத்திலும் வன்முறையை பார்த்துதான் வளர்கிறார்கள். வீட்டில் சண்டை, தெருவில் சண்டை, ஜாதி சண்டை,மத சண்டை,மற்றும் கட்சி சண்டை என்றும் கார்டூன் படம் தொடங்கி சினிமா படம் வரை வன்முறைதான் நிரம்பி வழிகிறது. அதை பெற்றோர்கள் முதல் நாட்டு தலைவர்கள் வரை யாரும் கண்டுகொள்வதே இல்லை. இதனால் மிகவும் பாதிப்புக்குள்ளாவது இளைய சமுதாயம்தான். இதனுடைய வெளிப்பாடுதான் நவ 12,2008. சென்னை Dr.அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறை வெளிப்பாடு. எங்கிருந்து வந்தது இந்த ஜாதி வெறி இந்த வயதில், கல்லுரிக்குள் கத்தி கலாசாரம். ஒழுக்கத்தை சொல்லிகொடுக்கும் பாடசாலைகளில் வன்முறை கலாச்சாரம். கல்லூரி முதல்வர்தான் காரணம் என்று மாணவர்களின் குற்றச்சாட்டு. " இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்" என்ற நிலை மாறி நாளைய தீவிரவாதிகளை மாறி வருகின்றனர். நாளுக்கு நாள் குற்றங்களும் குற்றவாளிகளும் அதிகரித்து கொண்டேதான் இருக்கின்றது. ஆகவே இதை சிந்திக்கும்போது ஒருவேளை நம் இளைய சமுதாயம் தடம் புரண்டு ஓடிகொண்டிருகிறதோ? என்ற பயம் கவ்வி பிடிக்கிறது. இதேர்க்கெல்லாம் சமுதாயத்தையும். சுற்று சூழலையும் குறை சொல்லாமல் நம் பிள்ளைகளின் எதிர் காலம் வளமை பெற்றிட உருவாக்குவோம் ஒரு புதிய இளைய சமுதாயம். இந்த குழந்தைகள் தினவிழாவை. அர்த்தமுள்ள சீர்திருத்த நாளாக அனுசரிபோம். மீண்டும் பழைய நேரு மாமா கதைகளை சொல்லி நேர்ரத்தை வீணாக்காமல், வாழ்க்கையின் அடிப்படை தத்துவங்களை சொல்லி தந்து கொண்டாடுவோம். இன்று அம்பேத்கர், முத்துராமலிங்க தேவரை வைத்து சண்டை போட்டவங்க . நேரு மாமா எங்களுக்கு தாய் மாமா என்றும் எங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்றும் சொல்லாதிருக்கட்டும். நாளை விடியல் புதிய விடியலாய் இருக்கட்டும்.